இந்தியாவில் டெஸ்ட் தொடரில் ஆட வேண்டும் என்றாலே, ஆனானப்பட்ட ஆஸ்திரேலியா வீரர்கள் கூட அஞ்சியபடி வந்திறங்கிய காலங்கள் உண்டு. ஆனால் இந்தியாவைப் போல பெரிய ஸ்டார்களோ மற்றும் இளம் கோடீஸ்வரர் வீரர்களோ இல்லாத சாதாரண, ஆனால் கிரிக்கெட் ஒழுக்கம் நிறைந்த தென்னாப்பிரிக்க அணி, இந்தியாவை 0-2 என சொந்த மண்ணில் புரட்டிப் போட்டு ஒயிட் வாஷ் செய்துள்ளது. அதோடு, இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலே இல்லாத வகையில் 408 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது.


