Last Updated:
டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் பங்கேற்றனர்.
பெரியகுளம் அருகே நடைபெற்ற மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டியில் 300க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் பங்கேற்பு. முதலிடத்தை தனியார் பள்ளியும், இரண்டாம் இடத்தை அரசுப் பள்ளி மாணவர்கள் பிடித்து அசத்தல்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மாவட்ட அளவிலான 5 ஆம் ஆண்டு டேக்வாண்டோ போட்டி நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் பங்கேற்றனர். ஜூனியர், சப் ஜூனியர், சீனியர் ஆகிய பிரிவுகளில் நடத்தப்பட்ட இப்போட்டியில் அதிக புள்ளிகள் பெறும் மாணவ மாணவிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இன்று காலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலிடத்தை லட்சுமிபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் பெற்றனர். இரண்டாம் இடத்தை அல்லிநகரம் அரசு மாதிரிப் பள்ளி மாணவர்கள் பெற்று அசத்தினர். அவர்களுக்கு பரிசுக்கோப்பைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
November 26, 2025 5:11 PM IST

