Last Updated:
ஜீத் பாபரிக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட ஒருவர் கடந்த 2024, நவம்பர் 26 அன்று அவர் மீது பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்திருந்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் செதேஷ்வர் புஜாராவின் மைத்துனர் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
அவர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்றுடன் சரியாக ஓராண்டு ஆகியுள்ள நிலையில் அவர் தற்கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் விபரம் குறித்து பார்க்கலாம்.
புஜாராவின் மைத்துனர் ஜீத் ரசிக்பாய் பாப்ரி என்பவர் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வசித்து வந்தார். இவர் இன்று தனது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி உடனடியாக மாளவியா நகர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
ஆரம்பக்கட்ட விசாரணைகள், ஜீத் பாபரி மன அழுத்தத்தின் காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று தெரிவிக்கின்றன. அவரது உடல் உடற்கூறு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
ஜீத் பாபரிக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட ஒருவர் கடந்த 2024, நவம்பர் 26 அன்று அவர் மீது பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்திருந்தார். திருமண வாக்குறுதியின்கீழ் ஜீத் பாபரி தன்னை வலுக்கட்டாயமாகப் பாலியல் உறவு வைத்துக் கொள்ளும்படி வற்புறுத்தியதாகவும், பின்னர் நிச்சயதார்த்தத்தை ரத்து செய்ததாகவும் அந்தப் பெண் தனது புகாரில் கூறியிருந்தார்.
இதனால் ஜீத் பாப்ரி கடுமையான மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட சரியாக ஓராண்டில் இன்று ஜீத் பாப்ரி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
November 26, 2025 8:52 PM IST
சி.எஸ்.கே. முன்னாள் வீரரின் மைத்துனர் தற்கொலை.. பாலியல் வழக்கில் சிக்கிய ஓராண்டில் நடந்த சம்பவம்


