Last Updated:
வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டின் தேசிய கிரிக்கெட் வாரியத்தின் மூலம் ஐபிஎல் நிர்வாகத்திற்குத் தங்கள் பெயர்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனையொட்டி, மினி ஏலம் அடுத்த மாதம் 16 ஆம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஏலத்தில் வீரர்கள் எப்படி பங்கேற்கலாம் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.
வீரர்கள் எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது பற்றி பார்க்கலாம். முதலில் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் தாங்களாகவே நேரடியாகப் பெயர்களைச் சமர்ப்பிக்க முடியாது. அவர்கள் தங்கள் நாட்டின் கிரிக்கெட் வாரியத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
உதாரணத்திற்கு இந்திய வீரர்கள் தங்கள் பெயர்களைச் சமர்ப்பிக்க, முதலில் பிசிசிஐ மூலம் அதிகாரப்பூர்வமாக விண்ணப்பிக்க வேண்டும். இந்தியாவில் விளையாடாத அல்லது இதுவரை ஐபிஎல் ஒப்பந்தம் இல்லாத இளம் வீரர்களுக்கு, பிசிசிஐயின் அனுமதியும், சில சமயங்களில் மாநில சங்கங்களின் பரிந்துரையும் தேவைப்படும்.
வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டின் தேசிய கிரிக்கெட் வாரியத்தின் மூலம் ஐபிஎல் நிர்வாகத்திற்குத் தங்கள் பெயர்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
அனைத்து விண்ணப்பங்களும் பெறப்பட்ட பிறகு, ஐபிஎல் நிர்வாகம் மற்றும் அணிகள் அவற்றைக் கவனமாக ஆய்வு செய்கின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் தேவைக்கேற்ப வீரர்களின் பெரிய பட்டியலைக் குறைத்து, ஏலத்திற்கான இறுதிப் பட்டியலை உருவாக்க ஐபிஎல் நிர்வாகத்திற்குச் சமர்ப்பிக்கின்றன. இந்த இறுதிப் பட்டியலில் இடம்பிடித்த வீரர்களே ஏலத்தில் இடம்பெறுவார்கள்.
அடிப்படை விலை என்பது, ஏலத்தில் ஒரு வீரருக்குக் கேட்கப்பட வேண்டிய குறைந்தபட்ச தொகை ஆகும். இந்த விலையைத் தாண்டித்தான் ஏலம் தொடங்கும்.
November 25, 2025 7:17 PM IST


