Last Updated:
முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், பொருளாதார மந்தநிலை காரணமாக, தங்கள் ஊழியர்களை ஆயிரக் கணக்கில் கூண்டோடு பணி நீக்கம் செய்து வருகின்றன.
பிரபல செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் தனது விற்பனை பிரிவில் பணியாற்றி வந்த ஊழியர்களை நீக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
உலகின் முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், பொருளாதார மந்தநிலை காரணமாக, தங்கள் ஊழியர்களை ஆயிரக் கணக்கில் கூண்டோடு பணி நீக்கம் செய்து வருகின்றன. அந்தவகையில் அமேசான், மைக்ரோசாஃப்ட், கூகுள், டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அண்மைக்காலமாக தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆப்பிள் நிறுவனம், தனது விற்பனை பிரிவில் பணியாற்றிய ஊழியர்களை நீக்கியுள்ளது.
இருப்பினும் எத்தனை ஊழியர்கள் அவர்கள் எந்தெந்த எந்தெந்த பகுதிகளில் பணியாற்றி வந்தார்கள் என்பது குறித்தான தகவலை ஆப்பிள் நிறுவனம் வெளியிடவில்லை.
இதனிடையே பணிநீக்கம் குறித்து விளக்கமளித்துள்ள ஆப்பிள் நிறுவனம், மிக குறைந்த அளவிலே ஊழியர்களை நீக்கியதாகவும், மற்ற பிரிவுகளில் ஆள்களை வேலைக்கு எடுத்து வருவதாகும் தெரிவித்துள்ளது.
தற்போது விற்பனை பிரிவில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் வேறு பிரிவிலும் விண்ணப்பிக்கலாம் என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு நிறுவனத்திற்குள்ளேயே மற்ற காலிப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 20 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
November 25, 2025 5:39 PM IST


