உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் நடைபெற்ற CITES – வனவிலங்குகள் மற்றும் தாவரங்களின் அச்சுறுத்தலுக்கு உள்ளான இனங்கள் பற்றிய சர்வதேச வர்த்தகத்திற்கான மாநாட்டில் இத்தகைய அங்கீகாரம் வந்தாராவுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
வந்தாரா என்பது ரிலையன்ஸ் ஃபவுண்டேஷனின் ஆதரவுடன் அனந்த் அம்பானியால் தொடங்கப்பட்ட ஒரு கனவுத் திட்டமாகும். ‘வந்தாரா’ என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு “வனத்தின் நட்சத்திரம்” என்று பொருள்.
3500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் அமைந்துள்ள வந்தாரா உலகிலேயே மிகப்பெரிய விலங்குகள் மீட்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையமாக செயல்படுகிறது.
இந்த நிலையில் வந்தாரா வெளிநாடுகளில் இருந்து விலங்குகளைச் சட்டவிரோதமாக இறக்குமதி செய்வதாக புகார்கள் எழுந்தன. ஆனால் இதற்கு எந்தவித அடிப்படை ஆதாரமும் கிடையாது என்று வந்தாரா தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவின் ஆய்வில், வந்தாராவின் செயல்பாடுகளில் நிதி முறைகேடுகளோ அல்லது பணமோசடிகளோ நடைபெறவில்லை என்று கண்டறியப்பட்டது.
இந்த நிலையில், ‘வந்தாரா என்பது ஒரு உலகத் தரம் வாய்ந்த, நவீன உள்கட்டமைப்பு மற்றும் மேம்பட்ட கால்நடை மருத்துவ வசதிகளுடன் கூடிய, நலன் சார்ந்து செயல்படும் நிறுவனம்’ என்று உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் நடைபெற்ற CITES – வனவிலங்குகள் மற்றும் தாவரங்களின் அச்சுறுத்தலுக்கு உள்ளான இனங்கள் பற்றிய சர்வதேச வர்த்தகத்திற்கான மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது வந்தாராவின் சட்டப்பூர்வமான, வெளிப்படையான, அறிவியல் அடிப்படையிலான வனவிலங்கு பராமரிப்பு மாதிரிக்கான ஒரு வலுவான அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.
முன்னதாக ஐக்கிய நாடுகள் சபையுடன் (UN) இணைக்கப்பட்ட அமைப்பான CITES செயலகம், செப்டம்பர் 2025-ல் வந்தாராவில் இரண்டு நாள் ஆய்வு மேற்கொண்டது.
November 24, 2025 7:39 PM IST
‘வந்தாரா சட்டப்பூர்வமாக செயல்படும் வனவிலங்கு பாதுகாப்பு மையம்’ -CITES மாநாட்டில் சர்வதேச அங்கீகாரம்

