உங்கள் நிலத்தில் வேறொருவர் புதையலைக் கண்டுபிடித்தால், இந்த நிலையில், சட்டம் உரிமையை சமமாகப் பகிர்கிறது. புதையலின் 50% நில உரிமையாளருக்கும், மீதமான 50% அதை கண்டுபிடித்த நபருக்கும் வழங்கப்படும். அதுவே, அரசு நிலத்தில் புதையல் கிடைத்தால், காடுகள், ரயில்வே, பொதுப்பணித் துறை நிலங்கள் போன்ற அரசுக்குச் சொந்தமான நிலங்களில் புதையல் கிடைத்தால் அது முழுமையாக அரசுக்கே சொந்தமாகும். அதே நேரத்தில், அதனை கண்டுபிடிப்பவருக்கு அரசு வெகுமதி வழங்கலாம். ஆனால், அது கட்டாயமில்லை.


