Last Updated:
Hockey World Cup 2025| தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 14-வது ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை-2025 முதல் முறையாக தமிழகத்தில் நடக்கிறது.
விழுப்புரம் பெருந்திட்ட வளாக, உள்விளையாட்டு அரங்கத்தில், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இந்தியா ஹாக்கி கூட்டமைப்பு இணைந்து நடத்தும் ஆண்கள் ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை அறிமுக விழா நடைபெற்றது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 14-வது ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை-2025 முதல் முறையாக தமிழகத்தில் நடக்கிறது. இப்போட்டி வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை சென்னை மற்றும் மதுரையில் நடக்கிறது. இந்த உலக கோப்பை போட்டியில் சர்வதேச அளவில் 24 அணிகள் கலந்து கொள்கின்றன. முன்னதாக உலக கோப்பை போட்டிக்கான வெற்றி கோப்பை தமிழ்நாடு முழுதும் சுற்றுப் பயணமாக எடுத்துச் செல்லப்படுகிறது.
அந்த வகையில் விழுப்புரம் வருகை புரிந்த கோப்பைக்கு, ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி வரவேற்றார். பொன்முடி எம்.எல்.ஏ., கோப்பையை அறிமுகம் செய்தார். இந்த கோப்பை விழுப்புரம் பெருந்திட்ட வளாக மைதானத்தின் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த கோப்பைக்கு மாணவர்கள் சிலம்பம் சுற்றியும் மல்லர் கம்பம் செய்தும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அதன் பின் மாவட்ட ஆட்சியர் ஹாக்கி விளையாடி, ஒவ்வொரு விளையாட்டின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
November 24, 2025 3:30 PM IST

