Last Updated:
உங்களுடைய மாத வருமானத்தில் 20% தொகையை எமர்ஜென்சி ஃபண்ட் மற்றும் முதலீடுகளில் ஈடுபடுத்துவது ஒரு நல்ல பழக்கம்.
நவீன வாழ்க்கை முறை மற்றும் அதிகரிக்கும் செலவுகளுக்கு மத்தியில் சேமிப்பதற்கும், செல்வத்தை அதிகரிப்பதற்கும் மில்லியனல்கள் மற்றும் ஜென்-Z குறிப்பிடத்தக்க சவால்களை சந்திக்கின்றனர். சரியான திட்டமிடல் இல்லாமல் பணத்தை விரைவாக செலவு செய்து விடுகின்றனர். எனவே, எதிர்காலத்தைப் பாதுகாக்கும் பொருட்டு பணத்தைச் சேமிப்பதற்கு மில்லியனல்கள் மற்றும் ஜென்-Z-க்கு உதவும் சில முக்கியமான குறிப்புகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
உங்களுடைய பணம் எங்கு செல்கிறது என்பதை அறியாமலேயே இருப்பதுதான் பணத்தைச் சேமிப்பதற்கான ஒரு முக்கியமான தடை. ஆன்லைன் புட் ஆர்டர்கள், கேப் ரைடுகள் மற்றும் சப்ஸ்கிரிப்ஷன்கள் போன்ற அன்றாட செலவுகள் ஒவ்வொரு மாதமும் குறிப்பிடத்தக்க அளவு பணத்தை எடுத்துக் கொள்கிறது. எனவே ஒவ்வொரு மாதமும் உங்களுடைய செலவுகள் அனைத்தையும் கண்காணித்து, எந்தெந்த செலவுகளைக் குறைக்கலாம் என்பதைக் கண்டுபிடிப்பது பொருளாதார வெற்றியை அடைவதற்கான அடித்தளமாக அமைகிறது.
உங்களுடைய மாத வருமானத்தில் 20% தொகையை எமர்ஜென்சி ஃபண்ட் மற்றும் முதலீடுகளில் ஈடுபடுத்துவது ஒரு நல்ல பழக்கம். செலவு செய்வதை காட்டிலும் சேமிப்பதற்கு முன்னுரிமை கொடுப்பதன் மூலமாக பொருளாதார நிலைத்தன்மையை விரைவாக அடையலாம்.
வேலை மாற்றங்கள், பயணம், ஒரு தொழிலை ஆரம்பிப்பது அல்லது திடீரென்று ஏற்படும் மருத்துவ செலவுகள் போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளைச் சமாளிப்பதற்கு ஒரு எமர்ஜென்சி ஃபண்ட் கட்டாயமாக தேவை. எனவே உங்களுடைய 6 மாத செலவு பணத்தை எமர்ஜென்சி ஃபண்டாக சேமித்து கஷ்ட காலத்தின் போது அதனை நீங்கள் பயன்படுத்தினால் கடன்கள் வாங்குவதைத் தவிர்க்கலாம்.
ஆரம்பகாலத்திலேயே நீங்கள் முதலீடு செய்து வந்தால் கூட்டு வட்டி முறையில் உங்களுடைய ரிட்டன்கள் நாளடைவில் பெரிதாக இருக்கும். சந்தை ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும் சிறிய அளவிலான தொகையை கூட நீங்கள் தொடர்ச்சியாக முதலீடு செய்யும்போது நிச்சயமாகப் பலனடையலாம்.
வீடு வாங்குவது, வெளிநாடு சென்று மேற்படிப்பு தொடர்வது அல்லது ஒரு பிசினஸ் துவங்குதல் போன்ற உங்களுடைய பொருளாதார இலக்குகள் எதுவாக இருந்தாலும் அதற்கு ஏற்றவாறு நீங்கள் திட்டமிட வேண்டும்.
வீடியோ எடிட்டிங், டிசைனிங், கன்டென்ட் ரைட்டிங், சோசியல் மீடியா மேனேஜ்மென்ட், டிரேடிங் போன்ற செயல்பாடுகள் மூலமாக நீங்கள் பார்ட் டைம் வேலை செய்து கூடுதல் வருமானத்தைப் பெறுவதற்கு முயற்சி செய்யலாம். இந்தப் பணத்தை நீங்கள் சேமிக்க பயன்படுத்தலாம்.
கிரெடிட் கார்டுகளை எப்போதும் நீங்கள் பொறுப்பாகக் கையாள வேண்டும். பில்களை முழுவதுமாக செலுத்துவது மற்றும் சரியான நேரத்தில் செலுத்துவதன் மூலமாக நல்ல கடன் வரலாற்றை அமைத்து எதிர்காலத்தில் கடன்கள் வாங்குவதில் எந்த ஒரு சிக்கல்களும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.
பொருளாதாரத்தைப் புரிந்து கொள்வது என்பது மிகவும் முக்கியம். ETFகள், SIPகள் மற்றும் இன்சூரன்ஸ் போன்றவற்றை புரிந்து கொள்ளுங்கள். பணத்தை முறையாகக் கையாளுவது மற்றும் புத்திசாலித்தனமான பொருளாதார முடிவுகளை எடுப்பது அவசியம்.
November 24, 2025 12:50 PM IST


