கோலாலம்பூர், நவம்பர் 24:
முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக், தனது எஞ்சியச் சிறைத் தண்டனையை காஜாங் சிறைக்குப் பதிலாக வீட்டில் கழிக்கக் கோரியது தொடர்பில் இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
SRC இண்டர்நேஷனல் RM42 மில்லியன் ஊழல் வழக்கில் ஆகஸ்ட் 2022 முதல் சிறையில் இருக்கும் நஜிப், 2024 ஜனவரி மேல் முறையீட்டு மன்ற கூட்டத்தின்போது, அன்றைய மாமன்னரால் ஒரு அரச ‘அங்கீகாரம்’ Royal “addendum” Order வழங்கப்பட்டதாகக் கூறி இதனை ஆதாரமாகக் கொண்டு உயர் நீதிமன்றத்திடம் விண்ணப்பம் செய்தார்.
எனினும், அது செல்லுபடியாகுமா என்பதை அரசாங்கம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
இந்த அங்கீகாரம் உள்ளது என்று கூட்ட அரசு நீதிமன்றம் முன்னர் தீர்ப்பளித்திருந்தாலும், அது சட்டப்பூர்வமாகச் செல்லுபடியாகுமா என்பதை உயர் நீதிமன்றம் இன்று முடிவு செய்யும்.
இன்றைய விசாரணை, நஜிப் வீட்டிற்குச் செல்ல முடியுமா அல்லது தொடர்ந்து சிறையிலேயே இருக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும்.
இந்த இறுதி முடிவு தாமதப்படுத்தப்படலாம் அல்லது மேன்முறையீடு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், நஜிப் அடுத்த மாதம் தனது 1MDB வழக்கின் தனித் தீர்ப்பையும் எதிர்கொள்கிறார்.
எனவே தான், அவரது சட்டப் போராட்டம் தொடர்வதால், அவரது எதிர்காலம் நிச்சயமற்றதாக உள்ளது.




