Last Updated:
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த செயல்முறை நவம்பர் 24, 2025 முதல் தமிழ்நாட்டில் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளால் கள ஆய்வு செய்யவுள்ளனர்.
இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழ்நாடு உட்பட 9 மாநிலங்களிலும், மூன்று யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை அறிவித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 4ஆம் தேதி தொடங்கிய இந்தப் பணி, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து திரும்ப வரும் டிசம்பர் மாதம் 4ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை எதிர்த்து திமுக உட்பட தமிழ்நாடு கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அது விசாரணையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த செயல்முறை நவம்பர் 24, 2025 முதல் தமிழ்நாட்டில் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளால் கள ஆய்வு செய்யவுள்ளனர் என தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு செயலாளர் அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.
இது குறித்து அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”2025 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தீவிர திருத்த செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகத்திற்கு வருகை தர உள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஊடகப் பிரிவைச் சேர்ந்த பி. பவன், துணை இயக்குநர் மற்றும் தேவன்ஷ் திவாரி ஆகியோர் நவம்பர் 24 முதல் 26, 2025 வரை சென்னையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கட்டம் குறித்த ஊடக ஒருங்கிணைப்பு மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்வார்கள். அதைத் தொடர்ந்து, அவர்கள் கள அளவிலான ஆய்வுகளை மேற்கொள்வார்கள்.
கூடுதலாக இந்திய தேர்தல் ஆணையத்தின் இயக்குனர் கிருஷ்ண குமார் திவாரி, இச்சிறப்பு தீவிர திருத்த செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து, குறிப்பாக மாவட்ட அளவில் சம்பந்தப்பட்ட வாக்கு சாவடி நிலை அலுவலர்கள் மூலம் கணக்கீட்டு படிவங்கள் விநியோகம் மற்றும் அதன் டிஜிட்டல் முறை உள்ளீடு குறித்து மதிப்பாய்வு செய்வதற்காக கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு வருகை தருவார்.
இதேபோல், மதுசூதன் குப்தா, செயலர் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்குச் சென்று சிறப்பு தீவிர திருத்தம் பற்றி ஆய்வு செய்வார்.” இவ்வாறு அவர் தெரிவிக்கப்பட்டுள்ளார்.
November 23, 2025 9:17 PM IST
SIR | கள ஆய்வுக்காக தமிழ்நாடு வரும் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள்… தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு


