யால சரணாலயத்தின் கோனகன் ஆரா பகுதியில் பொலிஸாரினால் நான்கு நாட்கள் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது மூன்று பெரிய அளவிலான கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பொலிஸாரின் முதல் கட்ட விசாரணையின் படி, அவ் இடத்திலிருந்து 200,000 க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளும் 50 கிலோகிராம்களுக்கும் அதிகமான உலர்ந்த கஞ்சாவும் கைப்பற்றப்பட்டன.
பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் ஐந்து ஏக்கர், மூன்று ஏக்கர் மற்றும் இரண்டு ஏக்கர் நிலத்தில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகள் பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் சோதனையின் போது மூன்று செடிகளும் முற்றிலும் அழிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

