Last Updated:
பந்துவீச்சாளர் மார்கோ ஜான்சன் 91 பந்துகளில் 7 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 93 ரன்கள் குவித்தார்
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முதலில் பேட்டிங் செய்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்ஸில் 489 ரன்கள் குவித்துள்ளது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி வலுவான நிலையில் இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்ற நிலையில் அந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அசாமின் கவுகாத்தி நகரில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்களைச் சேர்த்தனர். குறிப்பாக ஏழாவது பேட்ஸ்மேனாக களம் இறங்கிய செனுரன் முத்துசாமி 206 பந்துகளில் 109 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.
பந்துவீச்சாளர் மார்கோ ஜான்சன் 91 பந்துகளில் 7 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 93 ரன்கள் குவித்தார். இதனால் 151.1 ஓவரில் தென் ஆப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 489 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து இந்திய அணி பேட்ஸ்மேன்கள் முதல் இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகின்றனர்.
November 23, 2025 3:50 PM IST


