Last Updated:
G20 Summit | ஜி-20 மாநாட்டில் நரேந்திர மோடி, போதைப் பொருள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பை முறியடிக்க உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தினார்.
போதைப் பொருள் கடத்தல் கும்பல் மற்றும் பயங்கரவாத இயக்கங்கள் இடையேயான பொருளாதாரத் தொடர்பை முறியடிக்க உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஜி-20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
மூன்று நாட்கள் பயணமாக தென்னாப்பிரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டின் ஜோகன்னஸ்பெர்க் நகரில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் கலந்து கொண்டார். அவரை தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ரமபோசா வணக்கம் தெரிவித்து வரவேற்றார்.
தொடர்ந்து மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, உலகளாவிய வளர்ச்சிக்கான அளவுகோல்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார். அனைவரையும் உள்ளடக்கிய நிலையான வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
போதைப் பொருள் மற்றும் பயங்கரவாதம் இடையேயான தொடர்பை முறியடிக்கவும், உலகளாவிய சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் குழு அமைக்க ஜி-20 நாடுகள் முன்வரவேண்டும் என்றும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
இந்த மாநாட்டிற்கு இடையே இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ஐ.நா பொதுச்செயலாளர் அண்டோனியா குத்தரெஸ் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.
November 23, 2025 9:41 AM IST
“போதைப் பொருள் – பயங்கரவாதம் தொடர்பை முறியடிப்போம்..” – ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்


