Last Updated:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஹெட் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் 148 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை ஏற்படுத்தியிருக்கிறார்.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2025-26 ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 172 ரன்களும், 2ஆவது இன்னிங்சில் 132 ரன்களும் எடுத்திருந்தன. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 164 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் 2 ஆவது இன்னிங்சில் 2விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதில் ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் வெறும் 69 பந்துகளில் சதம் அடித்து தனது அதிவேக ஆட்டத்தை வெளிப்படுத்தினார். காயமடைந்த பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜாவுக்குப் பதிலாக அவர் துவக்க வீரராக களமிறங்கினார்.
இது ஆஷஸ் டெஸ்ட் வரலாற்றில் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிவேக சதம் ஆகும். டிராவிஸ் ஹெட் அடித்த இந்தச் சதம், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அணியின் நான்காவது இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட அதிவேக சதம் என்ற புதிய உலக சாதனையை ஏற்படுத்தியுளளது.
November 22, 2025 8:14 PM IST


