நாட்டின் பல பகுதிகளில் இன்றும் 100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, மேல், சபரகமுவ மற்றும், தென் மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
அத்துடன், நிலவும் மழையுடனான வானிலையைத் தொடர்ந்து நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. (a)

