Last Updated:
Flower rate hike : சுப முகூர்த்தத்தையொட்டி பூக்களின் விலை கிடுகிடு உயர்ந்துள்ளது. இதனால் மல்லிகை பூ கிலோ 2000 ரூபாய்க்கு விற்பனையானது.
கார்த்திகை மாதம் வளர்பிறை முதல் முகூர்த்த நாள் என்பதால் அனைத்து வகையான பூக்களின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அந்த வகையில், கார்த்திகை தொடர் முகூர்த்தங்கள் மற்றும் விஷேச நாட்களை முன்னிட்டு சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
சேலம் சந்தைகளுக்கு வீராணம், பனமரத்துப்பட்டி, மற்றும் ஓமலூர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பூக்கள் அதிகளவில் கொண்டு வரப்படுகின்றன. மேலும், சேலம் மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலிருந்தும் பூக்கள் வ உ சி சந்தைகளுக்கு வருகின்றன.
சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் பண்டிகைகள், விசேஷ நாட்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளின் போது பூக்களின் விலை பொதுவாக உயரும். மேலும், பருவமழை அல்லது காலநிலையால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், விளைச்சல் குறைந்து அதன் விளைவாக விலையும் உயரும்.
எனவே தற்போது, கார்த்திகை தொடர் முகூர்த்தங்கள் மற்றும் விஷேச நாட்களை முன்னிட்டு சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
மல்லிகை கிலோ ரூபாய் 2,000- க்கும், ஜாதிமல்லி ரூபாய் 1,200- க்கும், முல்லை ரூபாய் 800- க்கும், காக்கட்டான் ரூபாய் 550- க்கும், சின்ன நந்தியாவட்டம் ரூபாய் 1,500- க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Salem,Tamil Nadu
November 22, 2025 7:17 PM IST


