Last Updated:
தென்னாப்பிரிக்கா அணி 66.67 வெற்றி சதவீதத்துடன் 2ஆம் இடத்தில் உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பாயின்ட்ஸ் டேபிள், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மேட்ச்சுக்கு பின்னர் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் இடம் குறித்து பார்க்கலாம்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகின்றன. அந்த 2 ஆண்டுகளில் ஒரு அணி பெறக்கூடிய அதிகபட்ச வெற்றி சதவீதத்தின் அடிப்படையில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மோதும்.
தற்போது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முடிந்துள்ளது. அதில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.
இதன் அடிப்படையில் பாயின்ட்ஸ் டேபிள் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்று வெற்றி சதவீதம் 100-உடன் முதலிடத்தில் உள்ளது.
November 22, 2025 6:31 PM IST


