Last Updated:
முதல் இன்னிங்ஸில் 12.5 ஓவர்கள் வீசிய ஸ்டார்க் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி இங்கிலாந்து அணியை தடுமாறச் செய்தார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனை படைத்திருக்கிறார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி முதல் டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதில் ஆஸ்திரேலிய அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க், முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.
முதல் இன்னிங்ஸில் 12.5 ஓவர்கள் வீசிய ஸ்டார்க் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி இங்கிலாந்து அணியை தடுமாறச் செய்தார்.
இந்தத் தொடரின் முதல் போட்டியிலேயே தனது 10 விக்கெட்டுகளைப் பூர்த்தி செய்து சாதனை படைத்துள்ளார் ஸ்டார்க். இந்த 10 விக்கெட் சாதனைக்கு முன்பாக, ஸ்டார்க் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் (WTC) 200 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் மூன்றாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றார்.
முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன் 191 WTC விக்கெட்டுகளை வைத்திருந்த ஸ்டார்க், இங்கிலாந்தின் அனுபவ ஆட்டக்காரர் ஜோ ரூட்டை (8 ரன்கள், 11 பந்துகள்) இரண்டாவது இன்னிங்ஸின் 20வது ஓவரின் இரண்டாவது பந்தில் போல்ட் செய்து தனது 200வது விக்கெட்டைப் பதிவு செய்தார்.
November 22, 2025 4:58 PM IST


