சரி இதன்பிறகாவது வைபவ் சூர்யவன்ஷி, பிரியன்ஸ் ஆர்யா இருவரில் ஒருவர் களமிறக்கப்படலாம் என்ற நிலையில் தான், அசுதோஷ் ஷர்மா களத்திற்கு வந்தார். அவரும் தான் சந்தித்த முதல் பந்தை எக்ஸ்ட்ரா கவர் திசையில் அடிக்க முயன்று கேட்ச் ஆனார். இப்படி, சூப்பர் ஓவரில், இந்திய அணி முதல் இரண்டு பந்துகளிலேயே தனது இரண்டு தொடக்க வீரர்களையும் இழந்தது.


