இதனால் குடியிருப்பு சொத்துக்களில் முதலீடு செய்ய மக்கள் தீவிரமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள விரும்பும் தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு ஹோம் லோன்கள் மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருந்து வருகின்றன. வீட்டுக் கடனை பொறுத்தவரை கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய காரணி வட்டி விகிதம். தொகை மற்றும் முதிர்வு காலம், கிரெடிட் ஸ்கோர் மற்றும் ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதம் ஆகியவற்றைப் பொறுத்து வெவ்வேறு கடன் வழங்குநர்கள் வீட்டுக் கடன்களுக்கு வெவ்வேறு வட்டி விகிதங்களை அளிக்கிறார்கள்.
இந்த 2025-ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 6.50%லிருந்து 5.50%-ஆக 100bps புள்ளிகள் குறைத்ததால், வீட்டுக் கடனுக்கான கடன் வழங்குநர்களின் வட்டி விகிதங்களும் குறைந்து வருகின்றன. ரெப்போ ரேட் மற்றும் வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் விகிதாசாரம் (proportional) ஆகும், அதாவது, ரெப்போ ரேட் குறையும் போது, வீட்டுக் கடன் வட்டி விகிதமும் குறையும், ரெப்போ ரேட் அதிகரித்தால் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்கும்.
வட்டி விகிதங்கள் குறைந்து கொண்டே வந்தால் வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு தங்கள் கடன் சுமையைக் குறைக்க ஒரு வாய்ப்பை அது வழங்கக்கூடும் என்று BankBazaar.com-ன் தலைமை நிர்வாக அதிகாரி ஆதில் ஷெட்டி கூறுகிறார். “வீட்டுக் கடனுக்கான குறைந்த வட்டி விகிதம் மாதாந்திர செலவுகளை நேரடியாக குறைத்து, கடனின் காலத்தில் செலுத்தப்படும் மொத்த வட்டி அளவையும் குறைக்கிறது. எனினும் குறைந்த வட்டி விகித சுழற்சியில் இருந்து அதிகப் பலன்களைப் பெற நீங்கள் விரைவாக செயல்பட வேண்டும்” என்று அவர் மேலும் கூறுகிறார்.
இது குறித்து மேலும் பேசிய ஷெட்டி, வீட்டுக் கடன் வட்டி விகிதம் குறைவது, கடன் வாங்குபவர்களின் EMI செலவுகளை குறைத்து, கடனை திருப்பி செலுத்தும் தங்கள் தவணைக் காலத்தைக் குறைத்துக் கொள்ள வழிவகுக்கிறது. “இதனால் கடன் நிலுவைத் தொகையில் 5 முதல் 10 சதவீதம் வரை ஒரு சிறிய அளவிலான பணத்தை முன்கூட்டியே செலுத்துதல், குறைந்த விகிதத்துடன் இணைந்து, உங்கள் கடன் சுமை காலஅளவை பல ஆண்டுகளை குறைக்கலாம்” என்கிறார்.
UCO வங்கி – 7.25% முதல் 9.50% வரை
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா – 7.30% முதல் 9.50% வரை
கனரா வங்கி – 7.30% முதல் 10.25% வரை
ஜே & கே வங்கி- >= 7.35%
ஐஓபி வங்கி – 7.35% முதல் 8.45% வரை
சென்ட்ரல் வங்கி – 7.35% முதல் 8.90% வரை
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா – 7.35% முதல் 9.90% வரை
பேங்க் ஆஃப் இந்தியா – 7.35% முதல் 10.10% வரை
இந்தியன் வங்கி – 7.40% முதல் 8.80% வரை
பஞ்சாப் நேஷனல் வங்கி – 7.45% முதல் 9.15% வரை
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா – 7.50% முதல்
ஆக்சிஸ் வங்கி – 8.35% முதல்
HDFC வங்கி – 7.90% முதல்
ICICI வங்கி – 8.75% முதல் 9.65% வரை
வீட்டுக் கடனை திருப்பி செலுத்துவோர் தங்கள் தற்போதைய வட்டி விகிதத்தை சரிபார்த்து, புதிய கடன் வாங்குபவர்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்குமாறு ஷெட்டி அறிவுறுத்துகிறார். “50 முதல் 75 அடிப்படை புள்ளிகள் அல்லது அதற்கு மேற்பட்ட இடைவெளியை கண்டால், உங்கள் விருப்பங்களை நீங்கள் ஆராயலாம்,” என்று அவர் மேலும் கூறுகிறார். மேலும், கடன் வாங்குபவர்கள், ரெப்போ இணைக்கப்பட்ட கடன் விகிதம் போன்ற ஒரு அளவுகோல் மிதக்கும் விகிதத்தின் அடிப்படையில் கடன் வழங்கப்படுகிறதா என்பதைச் சரிபார்ப்பது முக்கியம்.
MCLR அல்லது பேஸ் ரேட் போன்ற பழைய அளவுகோலில் கடன் இருந்தால், RLLR-க்கு மாற ஷெட்டி அறிவுறுத்துகிறார். “இது போன்ற மாற்றத்திற்குப் பிறகும் இடைவெளி பெரியதாக இருந்தால், மற்றொரு கடன் வழங்குநருக்கு ரீஃபைனான்ஸிங் செய்ய பரிசீலியுங்கள்” என ஷெட்டி கூறுகிறார். ரீஃபைனான்ஸிங் செய்ய முடிவு செய்யும்போது நேரம் முக்கியமானது என்று ஷெட்டி கூறுகிறார். “interest component அதிகமாக இருக்கும் கடன் காலத்தின் முதல் பாதியில் ரீஃபைனான்ஸிங் மிகவும் நன்மை பயக்கும். பல கடன் வாங்குபவர்கள் இந்த முடிவை தாமதப்படுத்துகிறார்கள், இதனால் பல ஆண்டுகளாக லட்சங்களை இழக்க நேரிடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
November 22, 2025 2:16 PM IST

