கண்டி – கொழும்பு பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதியில் பாறைகள் சரிந்து விழுந்துள்ளன.
இதன் காரணமாக, அவ்வீதி ஊடான போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கனேதென்ன பிரதேசத்தில் மலையிலிருந்து பாறைகள் வீழ்ந்துள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் ஆபத்தான சூழலை கருத்தில் கொண்டு, இவ்வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், இயன்றவரை மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். R

