இத்தாலியில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண் மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில்
நேற்றையதினம்(20.11) உயிரிழந்துள்ளார்.
மார்ட்டின் வீதி, யாழ்ப்பாணத்தை தற்காலிக
வசிப்பிடமாக டொரிங்கடன் மாலினி யோகராசா (வயது 58) என்பவரே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
இவரது குடும்பம் இத்தாலியில் நிரந்தரமாக வசித்து வருகின்றது.
உடற்கூற்று பரிசோதனை
இந்நிலையில், இவர்
இடையிடையே யாழ்ப்பாணம் வந்து செல்வது வழமை. அந்தவகையில் கடந்த 20ஆம் திகதி
காலை மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில் சிறிது நேரத்தின் பின்னர்
உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம்
போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

