Last Updated:
போட்டியின்போது தான் டிஸ்லெக்ஸியா மற்றும் கவனக்குறைவு மிகை செயல்பாடு போன்ற சவால்களை எதிர்கொண்டதாக வெளிப்படையாகப் பேசினார்.
74வது மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டி தாய்லாந்தில் நடைபெற்றது. இப்போட்டியில், மெக்சிகோவைச் சேர்ந்த ஃபாத்திமா போஷ் 2025 ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார்.
இந்த போட்டியில் இந்தியா சார்பாக மானிகா விஸ்வகர்மா கலந்து கொண்டார். இவர் ராஜஸ்தானைச் சேர்ந்த அரசியல் அறிவியல் மாணவி ஆவார். இவர் ஆரம்பக்கட்ட வெற்றியாளர்களின் பட்டியலில் டாப் 30 இடத்தைப் பிடித்தார்.
ஆனால் நீச்சல் உடைச் சுற்றில் (Swimsuit Round) பிறகு, இவர் அதற்கடுத்த டாப் 12 போட்டியாளர்கள் பட்டியலில் இடம்பிடிக்கத் தவறி, போட்டியிலிருந்து வெளியேறினார்.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற கடும் போட்டிகளுக்கு மத்தியில் மெக்சிகோ நாட்டை சேர்ந்த ஃபாத்திமா போஷ் மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை தட்டிச் சென்றார். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிஸ் யூனிவர்ஸ் போட்டியின்போது தான் டிஸ்லெக்ஸியா மற்றும் கவனக்குறைவு மிகை செயல்பாடு போன்ற சவால்களை எதிர்கொண்டதாக வெளிப்படையாகப் பேசினார். இந்தச் சவால்களை அவர் பலமாக மாற்றி, மற்றவர்களுக்கும் ஊக்கமளிப்பவராக இருப்பதாக போட்டி நடுவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி ஃபாத்திமா போஷ், தனது பன்முகத் திறமைகள், தனிப்பட்ட சவால்களைச் சமாளிக்கும் மன உறுதி மற்றும் சமூகத் தாக்கம் செலுத்தும் ஆர்வம் ஆகியவற்றால் சர்வதேச அளவில் பாராட்டுகளைப் பெற்றவர் ஆவார்.
November 21, 2025 9:01 PM IST
மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்ற மெக்சிகோ நாட்டின் ஃபாத்திமா போஷ்.. இந்தியாவின் மானிகா வெளியேறியது எப்படி?


