Last Updated:
உலகக்கோப்பைக்கு தகுதிபெற்ற ஒவ்வொரு நாட்டிலிருந்தும் ஒரு முன்னணி வீரரின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.
உலக கால்பந்தாட்ட சம்மேளமான ஃபிஃபா வெளியிட்ட 42 நாடுகளின் நட்சத்திர வீரர்களின் புகைப்படங்கள் அடங்கிய போஸ்டரில் போர்ச்சுகலை சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோவின் ஃபோட்டோ இடம்பெறவில்லை. இதற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஃபிஃபா புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.
2026 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற முதல் 42 நாடுகளின் சாதனைகளைக் கொண்டாட, பிஃபா தனது சமூக ஊடகங்களில் ஒரு விளம்பரப் போஸ்டரை வெளியிட்டது.
அந்தப் போஸ்டரில், தகுதிபெற்ற ஒவ்வொரு நாட்டிலிருந்தும் ஒரு முன்னணி வீரரின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இதில் லியோனல் மெஸ்ஸி (அர்ஜென்டினா), கைலியன் எம்பாப்பே (பிரான்ஸ்), எர்லிங் ஹாலண்ட் (நார்வே) போன்ற பல பெரிய நட்சத்திரங்கள் இடம்பெற்றிருந்தனர்.
போஸ்டரில் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய விஷயம் என்னவென்றால், கால்பந்து உலகின் ஜாம்பவான்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் (Cristiano Ronaldo) புகைப்படம் இடம்பெறவில்லை. ரொனால்டோவுக்குப் பதிலாக, போர்ச்சுகல் அணியின் மற்றொரு முக்கிய வீரரான ப்ரூனோ பெர்னாண்டஸின் (Bruno Fernandes) புகைப்படம் அந்த போஸ்டரில் போர்ச்சுகலை பிரதிநிதித்துவப்படுத்தியது.
இதைத் தொடர்ந்து ஃபிஃபாவை கண்டித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஏராளமான பதிவுகளை பதிவிட்டு வந்தனர். தொடர்ந்து நெருக்கடி ஏற்பட்ட நிலையில் ஃபிஃபா தனது புதிய போஸ்டரை வெளியிட்டு அதில் ரொனால்டோவின் புகைப்படத்தை சேர்த்துள்ளது.
November 21, 2025 8:52 PM IST


