தவறான மெம்பர் ஐடி-ஐ UAN-லிருந்து நீக்கும் செயல்முறைக்கான படிப்படியான வழிகாட்டியை இங்கே பார்க்கலாம். இருப்பினும் நிறுவனம் தவறான மெம்பர் ஐடி-யில் ECR-ஐ தாக்கல் செய்திருந்தால், இந்த டீலிங்க் செயல்முறையை செய்ய முடியாது.
1. முதலில் ஊழியர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி (PF) கணக்குகள் மற்றும் பிற தொடர்புடைய சேவைகளை அணுகவும், நிர்வகிக்கவும் அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டில் உள்ள Unified Member Portal வெப்சைட்டிற்குச் செல்லவும். அங்கு உங்கள் UAN நம்பர், பாஸ்வேர்ட் மற்றும் கேப்ட்சா ஆகியவற்றை என்டர் செய்ய வேண்டும்.
2. இப்போது நீங்கள் view ஆப்ஷனுக்குச் சென்று பின்னர் service history செக்ஷனுக்குச் செல்ல வேண்டும்.
3. இந்த கட்டத்தில் நீங்கள் தவறான மெம்பர் ஐடியை தேர்ந்தெடுத்து டீலிங்க் (delink) பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
4. பின் ஏன் தவறான மெம்பர் ஐடி-யை நீக்குகிறீர்கள் என்பதற்கான காரணத்தைப் பகிர்ந்து கொள்ளலாம்.
5. ரெஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு அனுப்பப்படும் OTP-ஐ என்டர் செய்து சரிபார்ப்பு செயல்முறையைச் செய்து முடிக்கவும்.
6. உங்கள் கோரிக்கையின் அடிப்படையில் டீலிங்கிங் இறுதியாக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு, செய்து முடிக்கப்பட்டதற்கான மெசேஜ் திரையில் காட்டப்படும்.
7. இந்த செயல்முறை முடிந்ததும், நீங்கள் நீக்கிய தவறான மெம்பர் ஐடி-யின் சர்வீஸ் ஹிஸ்டரி தெரியாது. unified member portal-ல் இதை மீண்டும் செக் செய்து கொள்ளலாம்.
ஏற்கனவே குறிப்பிட்டபடி நிறுவனம் தவறான மெம்பர் ஐடி-ஐ பயன்படுத்தி ECR-ஐ தாக்கல் செய்திருந்தால், இந்த டீலிங்கிங் ப்ராசஸ் வெற்றிகரமாக முடிவடையாது. வெற்றிகரமாக முடிக்கப்பட்ட மெசேஜிற்கு பதிலாக, நீங்கள் ஒரு ‘error’ மெசேஜைக் காண்பீர்கள்.
இதனிடையே ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) மற்றும் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தில் (EPS) தொழிலாளர்களை கட்டாயமாக சேர்ப்பதற்காக ஊதிய உச்சவரம்பை ரூ.25,000-ஆக உயர்த்துவது குறித்து EPFO பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. டிசம்பர் அல்லது ஜனவரியில் நடைபெறும் அடுத்த கூட்டத்தில் EPFO-வின் மத்திய அறங்காவலர் குழு இது தொடர்பாக விவாதிக்க வாய்ப்புள்ளது.
புதிய EPFO விதிக்கான இறுதி ஒப்புதல் இந்தக் கூட்டத்தில் வழங்கப்படலாம். தொழிலாளர் அமைச்சகத்தின் உள் மதிப்பீட்டின்படி, மாதத்திற்கு ரூ.10,000 ஊதிய உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டால், அது 10 மில்லியனுக்கும் அதிகமான தனிநபர்களுக்கு சமூகப் பாதுகாப்பு சலுகைகளை கட்டாயமாக்கும் என்று ஒரு அதிகாரி கூறியுள்ளார்.
November 21, 2025 7:29 PM IST

