செம்பவாங் கிரசென்ட்டில் புளோக் 362A இல் இன்று நவம்பர் (21) காலை தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்து குறித்து காலை 8:15 மணிக்கு தகவல் கிடைத்ததை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) உறுதிப்படுத்தியது.
புதுக்கோட்டை செல்லும் ஊழியர் செந்தூரனின் உடல்
மூன்றாவது மாடியில் அமைந்துள்ள வீட்டின் படுக்கையறை தீ ஏற்பட்டதாக தெரிகிறது.
பின்னர் தண்ணீர் பீச்சியடிக்கும் ஜெட் கருவிகள் மூலம் தீ அணைக்கப்பட்டது.
அந்த வீட்டில் இருந்த இருவர் புகையை உள்ளிழுத்ததாக சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புளோக்கிலிருந்து சுமார் 50 பேர் வெளியேற்றப்பட்டனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை தொடர்கிறது.
Photos: Mothership reader and @revina.el/TikTok
The post செம்பவாங் கிரசென்ட்டில் தீ.. இருவர் மருத்துவமனையில் அனுமதி appeared first on Tamil Daily Singapore.

