
மலையக ரயில் பாதையில் வியாழக்கிழமை (20) அன்று தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இரண்டு தபால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு செல்லும் இரவு நேர தபால் ரயில் மற்றும் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு செல்லும் இரவு நேர தபால் ரயில் ரத்து செய்யப்பட்டதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

