தனிநபர் கடனுக்கான ப்ராசஸ் நீளமானது: தனிநபர் கடன்களுக்கான ப்ராசஸ் முடிய பல வாரங்களாகும் என்று பலர் கருதுகின்றனர். இன்றைய டிஜிட்டல் பேங்கிங் சேவை காரணமாக, பெரும்பாலான கடன்கள் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் அங்கீகரிக்கப்படுகின்றன, சில சமயங்களில் சில மணி நேரத்திற்குள்ளாகவே கூட ஒப்புதல் வழங்கப்படுகிறது. சில கடன் அளிப்பவர்கள் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு உடனடி கடன்களையும் வழங்குகிறார்கள். எனவே, உங்கள் ஆவணங்கள் ஒழுங்காக இருந்தால், உங்களுக்குத் தேவைப்படும்போது கடனுக்கான ஒப்புதலையும் விரைவாக பெறலாம் என்பதே உண்மை.


