இந்த நிலையில் மக்களை தனது ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்ய தூண்டும் வகையில் 60 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு வெவ்வேறு வட்டி விகிதங்களுடன் கூடிய 390 நாட்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை பஞ்சாப் நேஷனல் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.3,00,000 டெபாசிட் செய்தால், மெச்சூரிட்டியின்போது உங்களுக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.
ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு PNB கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குகிறது. ஆனால், சமீபத்தில் RBI ரெப்போ விகிதத்தை குறைத்த பிறகு, பல வங்கிகள் தங்கள் FD திட்டங்களுக்கு வழங்கி வரும் வட்டி விகிதங்களை குறைத்துள்ளன. இந்த நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கியானது தனது FD-க்களுக்கு 3.25% முதல் 7.50% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. அந்த வகையில் 390 நாட்கள் மெச்சூரிட்டி பீரியட் கொண்ட இந்த வங்கியின் FD-க்கு, 60 வயதிற்குட்பட்ட பொது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 6.7% ஆகும்.
அதே நேரம் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் 7.20%-ஆக உள்ளது. இந்த கணக்கீட்டின்படி PNB-ல் 390 நாட்கள் மெச்சூரிட்டி பீரியட் கொண்ட ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் ரூ.3 லட்சம் டெபாசிட் செய்தால், முதிர்ச்சியின்போது ரூ.3,22,073 கிடைக்கும். அதே மூத்த குடிமக்கள் என்றால் ரூ.3,23,768 கிடைக்கும். இந்த FD-யில் ஒருவர் 24 மாதங்களுக்கு ரூ.2,00,000 முதலீடு செய்தால், கிடைக்கும் முதிர்வுத் தொகையானது, முதலீடு செய்பவரின் வயதைப் பொறுத்து மாறுபடும்.
முதலீட்டுத் தொகை: ரூ.2,00,000
வட்டி விகிதம்: 6.40%
மொத்த வட்டி: ரூ.27,080
முதிர்வுத் தொகை: ரூ.2,27,080
முதலீட்டுத் தொகை: ரூ.2,00,000
வட்டி விகிதம்: 6.90%
மொத்த வட்டி: ரூ.29,325
முதிர்வுத் தொகை: ரூ.2,29,325
முதலீட்டுத் தொகை: ரூ.2,00,000
வட்டி விகிதம்: 7.20%
மொத்த வட்டி: ரூ.30,689
முதிர்வுத் தொகை: ரூ.2,30,689
குறைந்த ரிஸ்க் கொண்ட திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புவோருக்கும், வங்கியில் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க விரும்புவோருக்கும், நிலையான, உறுதியான வருமானத்தை விரும்புவோருக்கும் இந்தத் திட்டம் சிறந்தது. மூத்த மற்றும் மிக மூத்த குடிமக்கள் அதிக வட்டி பெறுகிறார்கள், இது இந்த FD-ஐ அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக்குகிறது.
November 20, 2025 5:45 PM IST
390 நாட்கள் ஸ்பெஷல் FD திட்டத்தை அறிமுகப்படுத்திய PNB…! ரூ.3 லட்சம் டெபாசிட் செய்தால் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா…?

