சிரம்பான்:
செண்டாயானில் உள்ள ஓர் உணவகத்தின் அருகே பாராங்கினால் தாக்கப்பட்டு பின்னர் சுட்டுக் கொல்லப்பட்ட 33 வயது நபருக்கு, மொத்தம் 42 குற்றச் செயல்களில் பின்னணி இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்ஸஃப்னி அஹ்மாட் கூறினார்.
கொள்ளை, வீடு புகுந்து திருடுதல், காயம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றப்பதிவுகள் அவர் மீது இருந்ததாக போலீஸ் தெரிவித்தது.
நேற்று இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. அப்போது அந்த நபர் தனது குடும்பத்தினருடன் உணவகத்தில் உணவருந்த வந்திருந்தார். பின்னர் தனது காரை நோக்கி நடந்துசெல்லும் போது, இரண்டு கார்களில் வந்த முகமூடி அணிந்த கும்பல் அவரைத் தாக்கியது.
ஆரம்ப விசாரணையில், அவர் தப்பிச் செல்ல முயற்சிக்கும் போது, கும்பல் உறுப்பினர்கள் பாராங்கினால் வெட்டியதுடன் பின்னர் துப்பாக்கியால் சுட்டதாக போலீஸ் கூறியுள்ளது.
காயத்தால் ரத்த இழந்து சாலையோர புல்வெளியில் அவர் உயிரிழந்தார். உடலில் பல ஆழமான வெட்டுக் காயங்களும் துப்பாக்கிச் சுட்ட காயங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்தக் கொலைக்கான விசாரணை குற்றவியல் சட்டம் 302 மற்றும் 1971ஆம் ஆண்டு சுடும் ஆயுதச் சட்டம் ஆகியவற்றின் கீழ் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
The post செண்டாயானில் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட ஆடவனுக்கு 42 குற்றப்பதிவுகள் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

