சிங்கப்பூரில் 15 வயது சிறுமியை காணவில்லை என்று காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
ஃபயித்ரிஷா அமெலியா பின்த் முகமது ஃபார்மி (Fyetrisha Amelia Binte Mohamed Farmi) என்ற அந்த சிறுவனை யாரேனும் கண்டால் அல்லது இருக்கும் இடம் தெரிந்தால் காவல்துறைக்கு தகவல் கொடுக்கலாம்.
புதுக்கோட்டை செல்லும் ஊழியர் செந்தூரனின் உடல்
சிறுமி கடைசியாக, நவம்பர் 12 அன்று அப்பர் செராங்கூன் சாலையில் உள்ள புளோக் 365B இல் காணப்பட்டார் என கூறப்பட்டுள்ளது.
தகவல் தெரிந்தால் 1800-255-0000 என்ற காவல்துறை ஹாட்லைன் எண்ணை அழைக்கலாம் அல்லது www.police.gov.sg/i-witness என்ற இணையதளத்தில் தகவல்களை சமர்ப்பிக்கலாம்.
அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
Photo: SPF

