சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்த புதுக்கோட்டையை சேர்ந்த செந்தூரன் (25) மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, வடகாடு ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் செந்தூரன், இவர் கிட்டத்தட்ட 10 மாதங்களாக சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்தார்.
சிங்கப்பூரில் கட்டுமான ஊழியர் மரணம் – “அன்பாக பழகக்கூடியவர்” – கண்ணீரில் சக ஊழியர்கள்
புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவன்யு வட்டாரத்தில் உள்ள வேலையிடத்தில் பணியில் இருந்த அவர், மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று சக ஊழியர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. (சிங்கப்பூர் அதிகாரிகள் சார்பில் அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை)
வெறும் 25 வயதே ஆன செந்தூரனின் பிரிவை தாங்காத உறவினர்கள் கதறி அழும் காட்சிகள் காண்போரை கண்கலங்க வைக்கிறது.
இந்நிலையில், அவரின் உடலை எப்படியாவது கொண்டு வந்து சேர்க்கும்படி அவரின் உறவினர்கள் தமிழ்நாட்டு அரசாங்கத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
“அவரை எப்டியாவது கூட்டி வந்திடுங்க அவர் முகத்தையாவது பார்க்கணும்.. உயிர் தான் இல்ல” என்று அவரின் சகோதரி கண்ணீர்மல்க வேண்டுகோள் விடுத்தார்.
“அப்பாக்கு ஆபரேஷன் பண்ணி 20 நாள் தான் ஆகுது.. அவரும் தம்பியை பாக்கணும்” என்றும் உயிரிழந்தவரின் சகோதரி கோரிக்கை வைத்துள்ளார்.
TOP Photo: SS From Polimer News

