Last Updated:
டெல்லி செங்கோட்டை அருகே மெட்ரோ ரயில் நிலையம் கேட் 1ல் கார் குண்டு வெடிப்பு, 4 வாகனங்கள் தீப்பற்றி சேதம், ஹரியானாவில் 350 கிலோ வெடிபொருள் பறிமுதல் பரபரப்பு.
டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 9 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கார் குண்டுவெடிப்பில் பலியானவர்களின் உடல்கள் சாலையில் சிதறி உள்ள காட்சிகள் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் கேட் 1 அருகே இருந்த கார் குண்டு வெடித்துள்ளது. இதனால் அருகே இருந்த 4 வாகனங்கள் வரை தீப்பற்றி சேதமடைந்துள்ளன என டெல்லி தீயனனைப்பு துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு மற்றும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர் என அஞ்சப்படுகிறது.
காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பினருக்கு ஆதரவாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ஹரியானாவில் 350 கிலோ வெடிபொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் டெல்லியில் கார் குண்டு வெடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் நாளை பிகார் சட்டமன்ற தேர்தலுக்கான இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் குண்டுவெடிப்பு சம்பவம் பதற்றத்தை அதிகரித்துள்ளது. டெல்லி முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லி முழுவதும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
November 10, 2025 7:22 PM IST


