இதன் பொருள், இந்தத் தேதிக்குப் பிறகு, beneficiary-யை ஆட் செய்யாமல் வாடிக்கையாளர்கள் mCASH வழியாகப் பணத்தை அனுப்ப முடியாது. மேலும் mCASH இணைப்பு அல்லது ஆப் வழியாக அனுப்பப்பட்ட நிதியைப் பெறவும் முடியாது. எனவே, வாடிக்கையாளர்களைப் பிற பாதுகாப்பான மற்றும் பிரபலமான டிஜிட்டல் கட்டண விருப்பங்களைப் பயன்படுத்துமாறு SBI தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ஒரு பதிவில் அறிவுறுத்தியுள்ளது. இவற்றில் UPI, IMPS, NEFT மற்றும் RTGS ஆகியவை அடங்கும், இவை தற்போது நாடு முழுவதும் மிகவும் நம்பகமான ஆன்லைன் நிதி பரிமாற்ற சேவைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.


