சிங்கப்பூருக்கு பல கனவுகளுடன் வேலைக்கு வந்த புதுக்கோட்டையை சேர்ந்த 25 வயது இளைஞர் மின்னல் தாக்கி மாண்ட செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, வடகாடு ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் செந்தூரன் (25). இவர் சிங்கப்பூருக்கு வேலைக்காக வேண்டி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வந்தார்.
சிங்கப்பூரில் பங்களாதேஷ் கட்டுமான ஊழியர் மரணம் – “அன்பாக பழகக்கூடியவர்” – கண்ணீரில் சக ஊழியர்கள்
தொழிற்கல்வி பட்டய படிப்பு முடித்துள்ள இவர், சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் கட்டுமான ஊழியராக வேலை செய்து வந்ததாக அவரின் வீட்டின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவன்யு வட்டாரத்தில் உள்ள வேலையிடத்தில் பணியில் இருந்துள்ளார்.
வேலையிடத்தில் மதியம் 3 மணிக்கு மேல் இடி மின்னலுடன் மழை பெய்து வந்துள்ளதாக சக ஊழியர்கள் கூறுகின்றனர்.
அப்போது மின்னல் தாக்கியதில் செந்தூரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று சக ஊழியர்கள் கூறியுள்ளனர்.
சுருண்டு தரையில் கிடக்கும் செந்தூரனை பார்த்த சக ஊழியர்கள், என்ன செய்வதென்று தெரியாமல் கண்ணீருடன் நின்றதாக கூறினர்.
பங்களாதேஷ் நபரை தாக்கிய 5 வெளிநாட்டு நபர்கள் – “S$1,000 பணத்தை தா” – என கேட்டு டார்ச்சர்
விவசாயிகளின் மகனான செந்தூரன், தன் குடும்பத்தை முன்னேற்ற சிங்கப்பூர் வந்ததாகவும், வாழ வேண்டிய வயதில் மரணித்ததாகவும் பெற்றோர்கள் மற்றும் கிரமாக வாசிகள் கண்ணீரில் மூழ்கினர்.
நிறுவனம் அவருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அவரின் பெற்றோர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
சிங்கப்பூர் ஊழியர்களின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள: https://t.me/tamilmicsetsg
லிட்டில் இந்தியாவில் புகையிலை வைத்திருந்த வெளிநாட்டு ஊழியருக்கு S$2,000 அபராதம்

