Last Updated:
உலகளாவிய பின்னடைவுகள் மற்றும் முக்கிய சந்தைகளில் வரி சார்ந்த பிரச்சனைகள் இருந்த போதிலும், 2025-26-ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி உட்பட ஜவுளி மற்றும் ஆடைத்துறை குறிப்பிடத்தக்க மீள்தன்மையை வெளிப்படுத்தி இருக்கின்றன.
2024ஆம் ஆண்டின் ஏப்ரல்-செப்டம்பர் மாதங்களை ஒப்பிடும்போது, 2025ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்தியாவின் ஜவுளி, ஆடைகள் மற்றும் படுக்கை விரிப்புகள், மேஜை விரிப்புகள், துண்டுகள் போன்ற ஆடை அல்லாத ஜவுளிப் பொருட்களின் உலகளாவிய ஏற்றுமதி 0.1 சதவீதம் அதிகரித்துள்ளதாக சமீபத்திய அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.
உலகளாவிய பின்னடைவுகள் மற்றும் முக்கிய சந்தைகளில் வரி சார்ந்த பிரச்சனைகள் இருந்த போதிலும், 2025-26-ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி உட்பட ஜவுளி மற்றும் ஆடைத்துறை குறிப்பிடத்தக்க மீள்தன்மையை வெளிப்படுத்தி இருக்கின்றன.
இந்தியாவின் பெரிய ஏற்றுமதி நாடுகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (14.5 சதவீதம்), இங்கிலாந்து (1.5 சதவீதம்), ஜப்பான் (19.0 சதவீதம்), ஜெர்மனி (2.9 சதவீதம்), ஸ்பெயின் (9.0 சதவீதம்) மற்றும் பிரான்ஸ் (9.2 சதவீதம்) ஆகியவை குறிப்பிடத்தக்க வளர்ச்சி விகிதங்களைக் கொண்டிருந்தன. மறுபுறம், அதிக வளர்ச்சி விகிதங்களைப் பதிவு செய்த பிற மார்க்கெட்களில் எகிப்து (27%), சவுதி அரேபியா (12.5%), ஹாங்காங் (69%) போன்றவை அடங்கும்.
மொத்தத்தில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி 111 நாடுகளில் சாதனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த 111 சந்தைகள் ஏப்ரல்-செப்டம்பர் 2025 காலக்கட்டத்தில் $8,489.08 மில்லியனை பங்களித்தன. இது முந்தைய ஆண்டில் $7,718.55 மில்லியனாக இருந்தது – இது 10 சதவீத வளர்ச்சியையும் $770.3 மில்லியன் முழுமையான அதிகரிப்பையும் பிரதிபலிக்கிறது. இந்த வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் முக்கிய துறைகளில் ரெடிமேட் கார்மென்ட்ஸ் (3.42 சதவீத வளர்ச்சி) மற்றும் சணல் (5.56 சதவீத வளர்ச்சி) ஆகியவை அடங்கும்.
உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் இந்தத் துறையின் வளர்ச்சி மற்றும் போட்டித்தன்மையை இந்த செயல்திறன் எடுத்துக்காட்டுவதாக ஜவுளி அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாரம்பரியமற்ற சந்தைகளில் இந்தியாவின் தொடர்ச்சியான விரிவாக்கம், “மேக் இன் இந்தியா” மற்றும் “ஆத்மநிர்பர் பாரத்” முயற்சிகளின் கீழ் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல், மதிப்பு கூட்டல் மற்றும் உலகளாவிய சந்தை ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் அரசின் கொள்கை கவனம் செலுத்துவதை இந்த சாதனை வளர்ச்சி உறுதிப்படுத்துகிறது.
இதனிடையே பல கைவினைப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது, நாட்டின் கைவினைஞர்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக இருக்கிறது. ஏனெனில், அவர்களின் தயாரிப்புகளுக்கான தேவை அதிகரித்துள்ளது, இது அவர்களுக்கு அதிக வருமானம் கிடைக்க வழிவகுத்துள்ளது மற்றும் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட பொருட்களுடன் போட்டியிடவும் இந்த வரி குறைப்பு உதவுகிறது.
மரத்தால் செய்யப்பட்ட பொருட்கள், டெரகோட்டா சணல் கைப்பைகள், ஜவுளிப் பொருட்கள் மற்றும் தோல் பொருட்கள் போன்ற பொருட்களை உற்பத்தி செய்யும் கைவினைஞர்களுக்கு GST 2.0 வரி குறைப்பு பயனளித்துள்ளது. வரிச் சுமை குறைந்திருப்பது பாரம்பரிய கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்களுக்கு வலுவான சந்தைகளை உருவாக்க உதவும்.
November 17, 2025 8:20 PM IST
ஏப்ரல் – செப்டம்பரில் 111 நாடுகளுக்கான இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் 10% வளர்ச்சி…! உலகளாவிய ஏற்றுமதி 0.1 சதவீதம் உயர்வு…


