நீண்ட கால முதலீடு எனும்போது இந்தியாவில் உள்ள பெரும்பாலான முதலீட்டாளர்கள் தேர்வு செய்வது பப்ளிக் பிராவிடன்ட் பண்ட் (PPF) மற்றும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) ஆகும். PPF மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் SIPகள் போன்றவை ஒரு கணிசமான தொகையை உருவாக்கி, உங்கள் இலக்குகளுக்கு உதவக்கூடிய சில ஆப்ஷன்கள். இந்த இரண்டுமே நீண்ட கால செல்வ சேமிப்புக்கு பயனுள்ளதாக அமைகின்றன.
ஆனால், இந்த இரண்டு திட்டங்கள் மூலமாக பெறப்படும் ரிட்டன்கள், சவுகரியத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கும் தன்மை, அமைப்பு மற்றும் கால அளவு ஆகியவை வேறுபடுகின்றன. இதில், பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் என்பது 15 வருட லாக்-இன் காலம் கொண்ட அரசு ஆதரவு பெற்று வரும் சேமிப்புத் திட்டம் ஆகும்.
இதற்கு ஒரு வருடத்திற்கு 7.1% வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், நீங்கள் பெறும் வருமானங்களுக்கு வரி செலுத்த தேவையில்லை. நிலையான மற்றும் உறுதியளிக்கப்பட்ட ரிட்டன்களை விரும்பும் முதலீட்டாளர்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்கின்றனர். 15 வருட காலத்திற்குப் பிறகு மேலும் ஐந்தைந்து வருடங்களுக்கு உங்களுடைய முதலீடுகளை உங்களால் நீட்டித்துக் கொள்ள முடியும்.
மறுபுறம் SIP என்பது மியூச்சுவல் ஃபண்டுகளில் வழக்கமான முறையில், அதாவது ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்வதற்கு அனுமதிக்கிறது. இதற்கான ரிட்டன் என்பது சந்தை ஏற்ற இறக்கங்கள் பொறுத்து மாறுபடலாம். சராசரியாக ஓராண்டுக்கு SIPகள் மூலம் வழக்கமாக 10 முதல் 12 சதவீத ரிட்டன்கள் கிடைத்து வருகின்றன.
மாதம் முதலீடு: 5000 ரூபாய்
கால அளவு: 15 வருடங்கள்
ரிட்டன்கள்: ஒரு ஆண்டுக்கு 7.1%
மொத்த முதலீடு: 9 லட்சம் ரூபாய்
தோராயமான ரிட்டன்கள்: 6.78 லட்சம் ரூபாய்
மெச்சூரிட்டி தொகை: 15.78 லட்சம் ரூபாய்
மாத முதலீடு: 5000 ரூபாய்
கால அளவு: 15 வருடங்கள்
ரிட்டன்கள்: ஒரு ஆண்டுக்கு 12 சதவீதம்
மொத்த முதலீடு: 9 லட்சம் ரூபாய்
தோராயமான ரிட்டன்கள்: 14.8 லட்சம் ரூபாய்
மெச்சூரிட்டி தொகை: 23.8 லட்சம் ரூபாய்
எனவே, இந்த இரண்டு திட்டங்களில் எதை தேர்வு செய்ய வேண்டும் என்பது உங்களுடைய பொருளாதார இலக்குகள், எந்த அளவிற்கு ரிஸ்க் எடுக்கலாம் என்ற உங்களுடைய மனப்பான்மை மற்றும் எவ்வளவு காலத்திற்கு முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் போன்ற காரணிகளைப் பொறுத்தது.
November 17, 2025 7:34 PM IST

