
மரண விசாரணை அதிகாரிகளின் கொடுப்பனவை அதிகரிப்பது குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன என, நீதி, சிறைச்சாலைகள் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர், வழக்கறிஞர் ஹர்ஷன நாணயக்கார பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (17) தெரிவித்தார்.
தொகையை அதிகரிப்பதோடு, அவர்களின் தொழில்முறைத் திறனையும் சரிபார்க்க வேண்டியது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தின் குழு நிலை விவாதத்தில், வெளியுறவு அமைச்சகத்தின் செலவினத் தலைப்பு மீதான விவாதத்தின் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

