சிங்கப்பூரில் பங்களாதேஷ் நபரை தாக்கி S$1,000 கொள்ளையடிக்க முயன்றதாக 5 வெளிநாட்டு நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
கொள்ளை கும்பலில் ஒருவரான 30 வயதுமிக்க பங்களாதேஷை சேர்ந்த சர்க்கர் சுமோனுக்கு இரண்டு ஆண்டுகள் ஒன்பது மாத சிறைத்தண்டனையும், இரண்டு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
லிட்டில் இந்தியாவில் புகையிலை வைத்திருந்த வெளிநாட்டு ஊழியருக்கு S$2,000 அபராதம்
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 40 வயதான ஹொசைன் பிலால், மாலை நேரத்தில் ஓய்வெடுக்க தனது தங்கும் இடத்தில் இருந்து கல்லாங் மைதானம் நோக்கி சைக்கிளில் சென்றார்.
மெர்டேகா (Merdeka) பாலத்தின் அடிச்சாலையைக் கடந்தபோது, வேண்டாமென்று தூக்கிப்போட்டது போல தோன்றிய ஒரு சைக்கிள் பூட்டை அவர் கண்டெடுத்தார்.
அப்போது திடீரென அவரின் பின்னால் இருந்து வந்த பிரமாணிக் ஷமிம் என்ற நபர், தனது மின் ஸ்கூட்டரையும் சைக்கிள் பூட்டையும் திருடியதாக பிலாலை குற்றம் சாட்டினார்.
பின்னர் பிலாலிடமிருந்து அந்த பூட்டைப் பறித்துகொண்ட பிரமாணிக், இழப்பீடாக S$1,000 கொடு என்று சொன்னார்.
“நான் எதையும் திருடவில்லை எதற்கு பணம் கொடுக்க வேண்டும்” என பிலால் மறுக்கவே, பிரமாணிக் கையில் இருந்த சைக்கிளின் பூட்டை வைத்து பிலாலைத் தாக்கினார்.
திடீரெனெ அங்கு வந்த இன்னொரு நான்கு பேர், அவரை அடித்து உதைத்து பணம் கேட்டுள்ளனர்.
சைக்கிள் பூட்டு மற்றும் மரக் கம்புகளை பயன்படுத்தி அவர்கள் பிலாலை தாக்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
“விடுங்க ப்ளீஸ்” என பிலால் கெஞ்சி கதறியும், இரக்கமற்ற அந்த ஐந்து பேரும் அவரைத் தொடர்ந்து தாக்கியுள்ளனர்.
வேறு வழி இல்லாமல் இறுதியாக டெபிட் கார்டு, கைபேசி மற்றும் அவர் வைத்திருந்த சுமார் S$50 பணத்தை அவர்களிடம் பிலால் கொடுத்தார்.
அதை பெற்றுக்கொண்ட பிறகும் அடங்காத அந்த கும்பல், பிலாலிடம் உன் சகோதரரை அழைத்து, கப்பமாக S$1,000 பணத்தை கொண்டுவந்து தந்துவிட்டு அழைத்துப்போக சொன்னார்கள்.
அவரின் சகோதரர் வருகைக்காக காத்திருந்த நேரத்திலும் விடாது பிலாலைத் தொடர்ந்து தாக்கினர்.
பின்னர் இரவு 7:30 மணியளவில் அங்கு வந்த பிலாலின் சகோதரர், பணத்தைக் கொடுக்க மறுத்து, காவல்துறையை அழைப்பதாக மிரட்டினார்.
இறுதியாக, அங்கிருந்து தப்பியோடிய பிலாலும் அவரது சகோதரரும் காவல்துறையை அழைத்தனர்.
அவரது கைபேசி மட்டுமே போலீசாரால் மீட்கப்பட்டது. கடந்த நவம்பர் 12 ஆம் தேதி வரை பிலாலுக்கு எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை.
இந்த கும்பலில் மீதமுள்ள நான்கு பேரின் விசாரணைகள் பின்னர் நடைபெறும்.
லிட்டில் இந்தியாவில் சந்துக்குள் இழுத்துச் சென்று தாக்கி கொள்ளை – இளைஞர் கைது

