இந்து மத நம்பிக்கைகளின் படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வம் மற்றும் கிரகத்திற்கு உரியதாக கருதப்படுகிறது. இதனால் வாரத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு தனிச்சிறப்பு உண்டு. அந்தந்த நாட்களில் செய்ய வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய விஷயங்களை தெரிந்து கொண்டு, அதன்படி நடந்து கொண்டால் அந்த நாளுக்கான கடவுள் மற்றும் கிரகத்தின் ஆசிகள் நடக்கும் கிடைக்கும். இதனால் வாழ்க்கையில் பல மாற்றங்களை காண முடியும் என நம்பப்படுகிறது.
அந்த வகையில் செவ்வாய்கிழமை என்பது முருகப் பெருமான் மற்றும் ஆஞ்சநேருக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் உரிய நாளாக கருதப்படுகிறது. ஜோதிட ரீதியாக செவ்வாய் பகவானை, நெருப்பு கிரகம் என்பார்கள். தைரியம், நிலம், வீடு, மனை, ரத்த தொடர்பான நோய்கள், வழக்குகள் ஆகியவற்றிற்கு காரணமான கிரகமாக செவ்வாய் பகவான் கருதப்படுகிறார். இவருக்குரிய செவ்வாய் கிழமையில் கடன் வாங்குவதோ அல்லது கொடுப்பதோ மிகவும் மோசமான கெடு பலன்களை தரும் என சொல்லப்படுகிறது. செவ்வாய்கிழமையில் ஏன் கடன் வாங்கக் கூடாது என சொல்கிறார்கள் என்ற காரணத்தை தெரிந்து கொள்ளலாம்.
செவ்வாய் பகவானை தர்திபுத்திரன் என்பார்கள். அதாவது மண் அல்லது பூமியின் மகன் என்று பொருள். இது பூமியின் பாதி அளவு இருந்தாலும், இது மக்களின் வாழ்க்கையில் வலுவான, பெரிய மற்றும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. செவ்வாய் பகவான் மனித வாழ்க்கையுடன் பல விஷயங்களில் தொடர்புடையவராக கருதப்படுகிறார். அதில் ஒன்று தான் கடன். அதனால் கடன் பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கு வழிபாடுகள், பரிகாரங்கள் செய்வதற்கு மிகவும் ஏற்ற நாளாக செவ்வாய் கிழமை கருதப்படுகிறது.
ஜோதிட ரீதியாக செவ்வாயை நெருப்பு கிரகம் என சொல்லுவதால் அவருக்குரிய செவ்வாய் கிழமையில் கடன் வாங்குவது என்பது நெருப்பை போன்று நம்மை துன்புறுத்தி, அழித்து விடும். நெருப்பு எப்படி பற்ற வைத்ததும் வேகமாக பரவி, மீள முடியாத அளவிற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி விடுமோ. அதே போல் செவ்வாய்கிழமையில் கடன் வாங்கினால், மீண்டும் மீண்டும் நீங்கள் கடன் வாங்கும் நிலை ஏற்படும். இதனால் கடன் பிரச்சனையால் நீங்கள் மேலும் மேலும் துன்பத்தையும், சுமையையும் அனுபவிப்பீர்களே தவிர, அதிலிருந்து வெளியே வர முடியாது.
அதே போல் செவ்வாய் கிழமை அன்று கடன் கொடுப்பதும் தவறு. அப்படி கடன் கொடுத்தால் அந்த பணத்தை உங்களால் திரும்ப வாங்கவே முடியாது. அதே சமயம் கடனை அடைப்பதற்கு சிறிய தொகையையாவது செவ்வாய் கிழமை அன்று தனியாக எடுத்து வைக்கலாம் அல்லது பழைய பாக்கியை கொஞ்சமாவது கொடுத்தால் கடன் வேகமாக அடைபட்டு விடும்.
கடன் பிரச்சனையில் இருந்து விடுபட நினைப்பவர்கள் செவ்வாய் கிழமை அன்று முருகன் மற்றும் அனுமனுக்கு விரதம் இருந்து வழிபடலாம். அனுமனுக்கு செந்தூரம் சாற்றி, சுந்தரகாண்டம் படிப்பது மிகவும் நல்லது. இதனால் அனைத்து விதமான பிரச்சனைகள், பொருளாதார சிக்கல்கள் ஆகியவற்றில் இருந்து விடுபட முடியும். செவ்வாய்கிழமையில் அனுமனை மனதார வழிபட்டு வந்தால் முக்தியை அடைய முடியும்.
The post செவ்வாய்கிழமையில் கடன் வாங்கக் கூடாது… appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

