இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியின் மூலம் செயல்படுத்தப்படும் இந்த சேவையில், தபால்காரர் வீட்டிற்கு வரும்போது ஆதார் எண், கைப்பேசி எண், ஓய்வூதிய கணக்கு விவரம் உள்ளிட்ட தகவல்களைப் பதிவுசெய்வார். விரல் ரேகை சரிபார்க்கப்பட்டவுடன், டிஜிட்டல் சான்றிதழ் சில நிமிடங்களில் உருவாக்கப்பட்டு, உடனடியாகத் துறை சார்ந்த கணினிச் செயலகத்துக்குத் தொடர்பு கொள்ளப்படும்.


