Last Updated:
சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக, காங்கிரஸ் தலா 2 இடங்களில் வெற்றி; தேவ்யானி ராணா, சோமேஷ் சந்திர சரண், ஹர்மீத் சிங் சந்து, நவீன் யாதவ் உள்ளிட்டோர் முன்னிலை.
நாடு முழுவதும் 8 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தலா 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், நக்ரோடா தொகுதியில் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. தேவந்தர் ராணாவின் மகள் தேவ்யானி ராணா சுமார் 24 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார். ஜம்மு காஷ்மீரின் பட்கம் தொகுதியில், மெகபூபா முப்தியின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதே போன்று, ஜார்க்கண்ட்டில் உள்ள கட்சிலா தொகுதியில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி வேட்பாளர் சோமேஷ் சந்திர சரண், 38 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை வீழ்த்தினார். மிசோரத்தில் உள்ள டம்பா தொகுதியில் ஆளும் சோரம் மக்கள் இயக்கத்தின் வேட்பாளர் தோல்வி அடைந்த நிலையில், மிசோ தேசிய முன்னணி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார்.
ஒடிசாவின் நவ்பாடா தொகுதியில் பாஜக வேட்பாளர் ஜெய், 83 ஆயிரத்து 748 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தினார். பஞ்சாப்பில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ஹர்மீத் சிங் சந்து, சிரோமணி அகாலி தளம் வேட்பாளரை விட 12 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.
ராஜஸ்தானின் அன்டா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரோமத் ஜெயின் 15 ஆயிரத்து 612 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை வீழ்த்தினார். இதே போன்று, தெலங்கானாவில் பாரத ராஷ்ட்ரிய சமிதி வேட்பாளரை விட காங்கிரஸ் கட்சி வேடபாளர் நவீன் யாதவ் 24 ஆயிரத்து 729 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி வாகை சூடினார்.
November 15, 2025 9:14 AM IST


