Last Updated:
ஆண்ட்ரே ரஸ்ஸலின் வெற்றிடத்தை நிரப்ப ஒரு புதிய, நம்பகமான வெளிநாட்டு ஆல்-ரவுண்டர் கொல்கத்தாவுக்கு தேவைப்படுகிறது.
வீரர்களை விடுவித்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகளின் பர்ஸில் மொத்தம் ரூ. 100 கோடிக்கும் அதிகமான தொகை உள்ளது. இதனால் நடைபெறவுள்ள மினி ஏலத்தில் இவ்விரு அணிகளுக்கும் இடையே வீரர்களை வாங்குவதில் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளும் இன்று வீரர்களை விடுவித்த பிறகு கொல்கத்தா அணியிடம் ரூ. 64.3 கோடியும், சென்னை அணியிடம் ரூ. 43.44 கோடியும் மீதம் உள்ளன.
கொல்கத்தா அணியை பொருத்தளவில் ரூ. 12 கோடிக்கு வாங்கப்பட்ட ஆண்ட்ரே ரஸ்ஸல், ரூ. 23.75 கோடிக்கு வாங்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர் ஆகியோருடன் குவின்டன் டி காக், மொயின் அலி மற்றும் என்ரிச் நோர்ட்ஜே போன்ற முக்கிய வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
ஆண்ட்ரே ரஸ்ஸலின் வெற்றிடத்தை நிரப்ப ஒரு புதிய, நம்பகமான வெளிநாட்டு ஆல்-ரவுண்டர் கொல்கத்தாவுக்கு தேவைப்படுகிறது. மேலும், ஒரு சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேன் மற்றும் அதிக வேகப்பந்து வீச்சாளர்களை வாங்குவதன் மூலம் தங்கள் அணியை முற்றிலும் புதிதாக உருவாக்க கொல்கத்தா திட்டமிட்டுள்ளது.
சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜா (டிரேட்), சாம் கரன் (டிரேட்), மதீஷா பத்திரனா , டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனால் தற்போது சென்னை அணியின் பர்ஸில் ரூ. 43.4 கோடி இருப்பில் உள்ளது.
ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரண் ஆகியோர் வெளியேறியதால், ஒரு சிறந்த இந்திய ஆல்-ரவுண்டர் மற்றும் டெத் ஓவர்களில் சிறப்பாகச் செயல்படக்கூடிய ஒரு வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர் பத்திரனாவுக்கு பதிலாக சென்னை அணிக்கு தேவைப்படுகிறது.
November 15, 2025 9:31 PM IST


