தேர்ச்சி விகிதம் விபரம்:
கடந்த 2025-ல் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள தனியார் பள்ளிகளில் மொத்தம் 7,564 மாணவர்கள் தேர்வு எழுதினர். இன்று வெளியான தேர்வு முடிவுகளின் படி தனியார் பள்ளிகளில் பயின்ற 7453 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 3794 மாணவர்களும் 3659 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் தனியார் பள்ளி ஒட்டுமொத்த தேர்ச்சி 98.53 சதவீதம் ஆகும். பாலினம் ரீதியாக, மாணவர்களின் தேர்ச்சி 97.76 சதவிகிதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி 99.35 சதவிகிதமாகவும் உள்ளது.

