90-ஆவது வயது வரை வாழ்வதே அரிது என்ற எண்ணம் பலருக்கு இருக்கலாம். ஆனால் 92ஆவது வயதில், 5வது முறையாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் ஒரு பிரபலம்.
அவர் தான் கீத் ரூபர்ட் முர்டாக். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா உள்ளிட்ட ஐந்து கண்டங்களில் ஊடக சாம்ராஜ்ஜியத்தை கொண்டுள்ள முர்டாக், அமெரிக்காவில் ஃபாக்ஸ் நியூஸ், நியூயார்க் போஸ்ட், வால் ஸ்ட்ரீட் ஜர்னல், இங்கிலாந்தின் தி சன், ஆஸ்திரேலியாவின் தி டெய்லி மிரர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சொந்தக்காரர் ஆவார்.
1956ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவை சேர்ந்த விமானப் பணிப் பெண்ணான Patricia Booker என்பவரை திருமணம் செய்தார். அவரை 1967 ஆம் ஆண்டு விவகாரத்து செய்துவிட்டு, அதே ஆண்டு Anna Torv என்ற செய்தி வாசிப்பாளரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அந்த உறவும் முறிந்த நிலையில், தன்னை விட 37 வயது குறைவான சீனாவை சேர்ந்த Wendi Deng என்பவரை மூன்றாவதாக கரம்பிடித்தார்.
இதையும் படிங்க : புதருக்குள் மறைந்திருந்த பெண்கள்.. விசாரித்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
அவரையும் விவாகரத்து செய்து 2016 ஆம் ஆண்டு மாடல் அழகியான Jerry Hall என்பவரை முர்டாக் நான்காவதாக மணம் முடித்தார். அந்த உறவும் முடிவுக்கு வந்த நிலையில், தனது நீண்ட நாள் தோழியான Elena Zhukova என்பவரை 5வதாக திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாக முர்டாக் அறிவித்துள்ளார் .
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…