Last Updated:
அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனாவுக்கு மீதான வரியை 90 நாட்களுக்கு நிறுத்தியதைத் தொடர்ந்து, சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு விதித்த கூடுதல் வரியை நிறுத்தியுள்ளது.
சீனா மீதான வரி உயர்வை மேலும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், சீனாவும் கூடுதல் வரியை நிறுத்திவைத்துள்ளது.
அமெரிக்காவின் அதிபராக பதவியேற்றது முதல் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் டிரம்ப், 90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான இறக்குமதி வரியை கடுமையாக உயர்த்தியுள்ளார். அந்த வகையில், சீன பொருட்களுக்கு 145 சதவீதம் இறக்குமதி வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார்.
இதற்கு பதிலடியாக அமெரிக்க பொருட்களுக்கு 125 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படும் என சீனா அறிவித்தது. இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு மத்தியில், சீனா மீதான கூடுதல் வரி நடைமுறையை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, அமெரிக்க பொருட்கள் மீதான 24% கூடுதல் வரி விதிப்பை நிறுத்தி வைப்பதாக சீனாவும் அறிவித்துள்ளது. இதன் மூலம், சீனாவில் அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரி 10 சதவீதமாகவும், அமெரிக்காவில் சீன பொருட்களுக்கான இறக்குமதி 30 சதவீதமாகவும் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
August 13, 2025 8:04 AM IST
90 நாட்களுக்கு வரி உயர்வு நிறுத்தி வைப்பு.. சீனா – அமெரிக்காவின் முடிவுக்கு காரணம் என்ன?


