• Login
Thursday, October 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

90 கி.மீ வேகத்தில் வெற்றிகர சோதனை! பெங்களூரு நம்ம மெட்ரோ பிங்க் லைனில் விரைவில் ரயில் சேவை தொடக்கம்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 29, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
90 கி.மீ வேகத்தில் வெற்றிகர சோதனை! பெங்களூரு நம்ம மெட்ரோ பிங்க் லைனில் விரைவில் ரயில் சேவை தொடக்கம்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 29, 2026 3:06 PM IST

இந்த புதிய மெட்ரோ பாதையின் வருகை தெற்கு பெங்களூரு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பணிகள் நடைபெறும் காட்சி
பணிகள் நடைபெறும் காட்சி

பெங்களூரு மாநகர மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான ‘நம்ம மெட்ரோ’ இரண்டாம் கட்ட திட்டத்தின் பிங்க் லைன் (Pink Line) பாதையில், முதற்கட்டமாக 7.38 கிலோமீட்டர் தூரமுள்ள உயர்மட்டப் பாதைக்கான பாதுகாப்பு அனுமதியை மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் (CMRS) வழங்கியுள்ளார்.

காளேனா அக்ரஹாரா (Kalena Agrahara) முதல் தாவரேகெரே (Tavarekere) வரையிலான இந்த உயர்மட்டப் பாதையை, வரும் நவம்பர் 15-ஆம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக திறந்து வைப்பார் என்றும், அதன் பிறகு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இது திறக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பான உத்தரவில், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் புதிதாக அமைக்கப்பட்ட இருவழிப் பாதையில் 750V DC மின்சார டிராக்‌ஷனுடன் பயணிகள் ரயில்களை இயக்க அனுமதி அளித்துள்ளார். கடந்த அக்டோபர் 6, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இந்த 7.38 கி.மீ தூரப் பாதை, கொத்தானூர் பராமரிப்பு பணிமனை (Depot) மற்றும் பையப்பனஹள்ளியில் உள்ள செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம் (OCC) ஆகியவற்றில் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

அதைத் தொடர்ந்து, அக்டோபர் 27 அன்று மணிக்கு 90 கி.மீ வேகத்தில் நடத்தப்பட்ட அதிவேக சோதனை ஓட்டங்கள் மற்றும் பாதுகாப்பு சான்றிதழ்களை ஆய்வு செய்த பிறகே இந்த அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதியின்படி, தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பின் (ATP) கீழ் மணிக்கு அதிகபட்சமாக 80 கி.மீ வேகத்திலும், நிலையங்களின் தளங்களில் மணிக்கு 60 கி.மீ வேகத்திலும் ரயில்களை இயக்க நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக திறக்கப்படவுள்ள இந்த உயர்மட்டப் பாதையில் மொத்தம் 6 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன.

தெற்கு பெங்களூருவின் முக்கிய பகுதிகளை இணைக்கும் இந்த பிங்க் லைன் திட்டம், ஒட்டுமொத்தமாக காளேனா அக்ரஹாராவில் தொடங்கி வட பெங்களூருவில் உள்ள நாகவாரா (Nagawara) வரை இணைக்கப்பட உள்ளது. தற்போது திறக்கப்படவுள்ள உயர்மட்டப் பகுதியைத் தொடர்ந்து, நாகவாரா வரையிலான மீதமுள்ள சுரங்கப் பாதை பணிகளும் நிறைவடையும் தருவாயில் உள்ளன.

இந்த புதிய மெட்ரோ பாதையின் வருகை தெற்கு பெங்களூரு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, நாள்தோறும் பயணிக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

Previous Post

10 ஆண்டு நம்பிக்கைக்கு வேட்டு வைத்த பண ஆசை

Next Post

Gold Price Today | நகை வாங்க இதுதான் சரியான நேரம்.. மிஸ் பண்ணிடாதீங்க.. இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

Next Post
Gold Price Today | நகை வாங்க இதுதான் சரியான நேரம்.. மிஸ் பண்ணிடாதீங்க.. இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

Gold Price Today | நகை வாங்க இதுதான் சரியான நேரம்.. மிஸ் பண்ணிடாதீங்க.. இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin