அமெரிக்க நிறுவனத்தைச் சேர்ந்த தலைமை செயல் அதிகாரி ஒருவர், தனது ஊழியர்களில் 90% பேரை அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளார்.
நிறுவனத்தில் பணிபுரிந்த 110 ஊழியர்களில் தற்போது 11 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.
நிறுவனத்தின் ஆலோசனைக் குழு கூட்டத்தில் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், அக்கூட்டத்தில் 11 பேர் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த தலைமை செயல் அதிகாரி, 11 பேரைத் தவிர்த்து எஞ்சிய அனைவரையும் பணியிலிருந்து நீக்கி மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இந்த மின்னஞ்சல் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
கடமை தவறேல்
அமெரிக்காவில் செயல்பட்டுவரும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பால்ட்வின், காலையில் ஆலோசனைக் குழு கூட்டத்திற்கு மின்னஞ்சலில் அழைப்பு விடுத்துள்ளார்.
முன்கூட்டியே இந்தக் கூட்டம் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் இந்தக் கூட்டத்தில் 11 பேர் மட்டுமே இணைய வாயிலாக பங்கேற்றுள்ளனர்.
110 ஊழியர்களைக் கொண்ட நிறுவனத்தில் 11 பேர் மட்டுமே பங்கேற்றதால், ஆத்திரமடைந்த தலைமை செயல் அதிகாரி, 99 பேருக்கும் பணிநீக்க கடிதத்தை அனுப்பியுள்ளார்.
இந்தக் கடிதத்தை பணிநீக்கம் பெற்ற ஒருவர் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த மின்னஞ்சல் கடிதம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

