தெலுக் இந்தான்:
45 வயதான சந்தேக நபருக்கு ஆறு குற்றப் பதிவுகள் இருப்பதாகவும்: அதில் ஒன்று போதைப்பொருள் தொடர்பானது, நான்கு திருட்டு மற்றும் ஒன்று பாலியல் வன்கொடுமை தொடர்பானது என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக, குறித்த விபத்தில் காயமடையாத ஓட்டுநர் இன்று காலை சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 41 இன் கீழ் கைது செய்யப்பட்டதாக ஹிலிர் பேராக் மாவட்ட காவல்துறைத் தலைவர் ACP டாக்டர் பக்ரி ஜைனல் அபிடின் தெரிவித்தார்.
முதற்கட்ட சிறுநீர் பரிசோதனையில் ஓட்டுநர் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான அறிகுறி இல்லை என்று கண்டறியப்பட்டது.
இந்த சம்பவம் இன்று காலை 8.50 மணியளவில், தெலுக் இந்தானில்இருந்து பனி முடிவடைந்து ஈப்போவிற்கு 18 FRU பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஒரு லோரி, ஜாலான் சிகஸ்-சுங்கை லாம்பாம் வழியாக சரளைக் கற்கள் ஏற்றிவந்த லோரியுடன் மோதியது.
இந்த விபத்தில் ஒன்பது FRU பணியாளர்கள் கொல்லப்பட்டனர், இருவர் படுகாயமடைந்தனர், மேலும் ஏழு பேர் லேசான காயங்களுக்கு ஆளானார்கள்.


